
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கரூர் சம்பவத்துக்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம் என்றும் காவல்துறை பேச்சை ரசிகர்கள் மதிக்காததே காரணம் என்றும் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், கரூர் சம்பவத்துக்கு விஜய் மட்டுமே காரணம் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், ''கரூர் சம்பவத்துக்கு விஜய் மட்டும் தான் காரணம். நான் இப்படி சொல்வதால் என்னை திமுக ஆதரவாளர்கள் என நினைத்து விட வேண்டாம். அப்படி நினைத்தாலும் பிரச்சனையில்லை. 4 மணிக்கு செல்ல வேண்டிய இடத்தில் 7 மணிக்கு தாமதமாக சென்றது விஜய் செய்த முதல் தவறு. இதனால் கூட்டம் கூடி விட்டது. நான் அரசியல் கோணத்தில் இதை பார்க்கவில்லை. நியாயத்தை பார்க்க வேண்டும்.
பொதுவாக ஒரு வீட்டில் துக்கம் நடந்து விட்டால் நாம் தான் அந்த வீட்டுக்கு சென்று துக்கம் விசாரிப்போம். அவர்களை நமது வீட்டுக்கு வரவழைத்து துக்கம் விசாரிக்க மாட்டோம். விஜய் செய்தது பெரும் தவறு. பாதுகாப்பு காரணங்களுக்காக விஜய் கரூர் செல்லவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எம்.ஜி.ஆருக்கு இதை விட கூட்டம் அதிகமாக அவரும். அவர் எப்படி கட்டுப்படுத்தினார்?
எம்.ஜி.ஆர் மாதிரி வர முடியாது
எம்.ஜி.ஆருக்கு கூட்டம் கூடும்போது மக்கள் கட்டுக்கோப்பாக இருந்தனர். அப்போதைய ஹீரோ எம்.ஜி.ஆர் தனது திரைப்படங்களிலும் மக்களுக்கு நல்லது செய்வதுபோல் நடிப்பார். அப்பா, அப்பாவுக்கு உதவி செய்ய வேண்டும் என கூறுவார். மக்களுக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டவர். ஆனால் இப்போதைய ஹீரோ (விஜய்) அப்படி இல்லை. ஒரு ஹீரோ மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.
அப்பா, அப்பாவுக்கு உதவி செய்ய வேண்டும் என படத்தில் கூறும்போது அவரை பின்பற்றும் ரசிகர்கள் அதை செய்வார்கள். ஆனால் ஒரு ஹீரோ இப்படி இருக்காதபோது, தனது ரசிர்களை