
ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்னும் புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் அதிகபட்சமாக மும்பையில் இதுவரை 20 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் பாதிக்கும் மேற்பட்டோர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். ராஜஸ்தானில் 9 பேர், டெல்லியில் 6 பேர், குஜராத்தில் 4 பேர், கர்நாடகாவில் 3 பேர் சண்டிகர், ஆந்திரா, கேரளாவில் தலா ஒருவர் என இதுவரை 45 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார். தென் ஆப்பிரிக்க நாட்டில், கொரோனா வைரஸ் தொற்று தனது புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு ஒமைக்ரான் என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தொற்று, டெல்டா வகை கொரோனா தொற்றுகளை விட மிகவும் ஆபத்தானது என்றும், இது ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து தாக்குவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேல், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்குப் பரவிய ஒமைக்ரான், இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உட்பட பல மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எழுதி உள்ள கடிதத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்த தவறியவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த வேண்டும். இரண்டாவது டோஸ் செலுத்தி கொள்ளாதவர்களையும் கண்டறிந்து, அவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், ஐசியூ படுக்கைகள் ஆகியவற்றின் இருப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். காலியாக உள்ள படுக்கைகளை புதுப்பித்து, மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருப்பதுடன், முன்னர் கிளஸ்டர் உருவான இடங்களை கண்டறிந்து வைத்திருக்க வேண்டும். ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.