எருதுவிடும் திருவிழாவை பாதியிலேயே நிறுத்தி சார் ஆட்சியர் தீடீர் ஆய்வு…

 
Published : Jan 28, 2017, 07:07 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
எருதுவிடும் திருவிழாவை பாதியிலேயே நிறுத்தி சார் ஆட்சியர் தீடீர் ஆய்வு…

சுருக்கம்

வேலூர்

வேலூரில் எருதுவிடும் விழா நடந்துக் கொண்டிருக்கும்போதே, சார் ஆட்சியர் விழாவை நிறுத்தி ஆய்வு செய்து பாதுகாப்பு அம்சங்களை உறுதிசெய்த பின்னர் மீண்டும் போட்டியைத் தொடர்ந்து நடத்தினார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இராமநாயக்கன் பேட்டை கிராமத்தில் நேற்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இதில் குறிப்பிட்ட இலக்கை வேகமாக கடக்கும் காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போதே திருப்பத்தூர் சார் ஆட்சியர் கார்த்திகேயன் எருதுவிடும் திருவிழாவை தீடீர் ஆய்வு செய்தார்.

அப்போது இளைஞர்கள் கூட்டத்தை முறைப்படுத்துவதற்காக போட்டிடையை இடையே நிறுத்தி கூட்டத்தை சரி செய்தார்.  

எருதுவிடும் போட்டியை காண மரத்தில் அமர்ந்திருந்த இளைஞர்களை கீழே இறங்க செய்து பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்து பின்னரே போட்டிகளை நடத்த அனுமதித்தார்.

ஆட்சியரின் இந்த ஆய்வால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டாலும், மீண்டும் போட்டியைத் தொடர்ந்தவுடன் அனைவரும் எருதுகளைப் பிடிக்கும் உற்சாகத்திற்கு மாறினர்.

போட்டியைக் காண வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீறிபுபாய்ந்த காளைகளை பிடித்து உற்சாகம் அடைந்தனர்.

 

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?