Erode East By Election Results Live : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி. காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 1,10,556, அதிமுக பெற்ற வாக்குகள் 43,981. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
06:01 PM (IST) Mar 02
14வது சுற்று முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ்- 1,04,907, அதிமுக - 41,666, நாம் தமிழர் கட்சி - 7,984, தேமுதிக - 1,115 வாக்குகளை பெற்றுள்ளனர்.
04:35 PM (IST) Mar 02
12வது சுற்று முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ்- 91,066, அதிமுக - 35,532, நாம் தமிழர் கட்சி - 6,017, தேமுதிக - 883 வாக்குகளை பெற்றுள்ளனர்.
04:16 PM (IST) Mar 02
11வது சுற்று முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ்- 83,528, அதிமுக - 32,360, நாம் தமிழர் கட்சி - 5,117, தேமுதிக - 803 வாக்குகளை பெற்றுள்ளனர்.
03:49 PM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வெற்றி பெற்றதை முன்னிட்டு திமுக தொண்டர் ஒருவர் சாலையில் அங்கப்பிரதட்சனம் செய்து கொண்டாடினார்.
03:13 PM (IST) Mar 02
10வது சுற்று முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ்- 78,834, அதிமுக- 28,637, நாதக- 5,117, தேமுதிக- 803 வாக்குகளை பெற்றுள்ளன.
03:10 PM (IST) Mar 02
இடைத்தேர்தலில் 28,637 வாக்குகள் பெற்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது டெபாசிட்டை இழக்காமல் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
02:29 PM (IST) Mar 02
ஈரோடு இடைத்தேர்தலில் 9 சுற்று முடிவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் -67094, அதிமுக-24083, நாதக-4062, தேமுதிக-605 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
12:57 PM (IST) Mar 02
ஈரோடு இடைத்தேர்தலில் 7 சுற்று முடிவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் -53548, அதிமுக வேட்பாளர் தென்னரசு -19936, நாதக மேனகா -2964, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் -431 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
12:29 PM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வரும் நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க குவிந்த தொண்டர்கள்.
12:20 PM (IST) Mar 02
ஈரோடு இடைத்தேர்தலில் 5 சுற்று முடிவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 39855, அதிமுக வேட்பாளர் தென்னரசு 13515 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
12:06 PM (IST) Mar 02
கோவை ஆத்துப்பாலம் பகுதியில் காங்கிரஸ் மனித உரிமை துறையினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
11:50 AM (IST) Mar 02
மதசார்பற்ற கூட்டணி மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியென தெரிவித்துள்ள ஈவிகேஎஸ், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பணியாற்றுவது பெருமையளிப்பதாக ஈவிகேஎஸ் தெரிவித்துள்ளார்
11:43 AM (IST) Mar 02
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அதிக வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளதால் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார். அப்போது பணநாயகம் வென்றது, ஜனநாயகம் தோற்றுவிட்டதாக தென்னரசு தெரிவித்தார்
11:43 AM (IST) Mar 02
11:41 AM (IST) Mar 02
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அதிக வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளதால் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார். அப்போது பணநாயகம் வென்றது, ஜனநாயகம் தோற்றுவிட்டதாக தென்னரசு தெரிவித்தார்
11:37 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளதையடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் அண்ணா அறிவாலயம் வந்த முதலமைச்சருக்கு தொண்டர்கள் எழுச்சி பொங்க வரவேற்பு கொடுத்தனர்.
11:34 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்_31,928, அதிமுக 10,618 நாதக-1832, தேமுதிக-261வாக்குகளை பெற்றுள்ளனர்.
11:17 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்_23902, அதிமுக 8275, நாதக-514, தேமுதிக-90 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், 30 வேட்பாளர்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை. நோட்டாவிற்கு 23 வாக்குகள் கிடைத்துள்ளத
11:15 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்_23902, அதிமுக 8275, நாதக-514, தேமுதிக-90 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், 30 வேட்பாளர்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை
11:11 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்_23902, அதிமுக 8275, நாதக-514, தேமுதிக-90 வாக்குகளை பெற்றுள்ளனர்.
10:55 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டதையடுத்து 3 வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது
10:51 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு தொகுதியின் இரண்டு சுற்று முடிவடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் 22,746, அதிமுக வேட்பாளர் தென்னரசு 6497 வாக்குகள் பெற்றுள்ளனர். இரண்டு சுற்று முடிவில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் முன்னிலையில் இருப்பதால் அதிமுக டெபாசிட் வாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது
10:27 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமூக கூட்டணியில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
10:18 AM (IST) Mar 02
Erode East By Poll Results: ஈவிகேஎஸ் இளங்கோவன் 22,746 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
அதிமுகவின் தென்னரசு 6,497 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 514 வாக்குகள் மட்டுமே இதுவரை பெற்றுள்ளார்.
10:12 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தம், முதல் சுற்று முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு 3 வது சுற்று தொடங்கும் என தேர்தல் அதிகாரி தகவல்
10:09 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்-22746, அதிமுக-6497, நாதக-514 வாக்குகளை பெற்றுள்ளனர்.
10:05 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்களை காவல்துறை அனுமதிக்க மறுத்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிடம் முறையிட்டுள்ளனர்
09:58 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்:
காங்கிரஸ் - 14,987
அதிமுக - 5,160
9,527 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்
09:34 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 17417 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 5598 வாக்குகள் நாம் தமிழர் கட்சி 585 வாக்குகள் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் 11,819 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
09:29 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் - 12,803, தென்னரசு - 4324, நாம் தமிழர் கட்சி மேனகா -585 வாக்குகளை பெற்றுள்ளனர்.
09:25 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது உள்ள நிலவரத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் - 11,023, தென்னரசு - 3718, நாம் தமிழர் மேனகா - 376 தேமுதிக ஆனந்து - 87 வாக்குகளை பெற்றுள்ளனர்.
09:21 AM (IST) Mar 02
ஈரோடு தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெறும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
09:18 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மின்னனு வாக்கு எண்ணும் பணியானது வேகமாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் வேட்பாளர் 9124 , அதிமுக வேட்பாளர் 2868 வாக்குகள் பெற்றுள்ளார்.
09:11 AM (IST) Mar 02
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் 5318 வாக்குகளும், அதிமுக 1926 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 327 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 17 வாக்குகள் பெற்றுள்ளனர்.
09:07 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 1414, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 3642 வாக்குகள் பெற்றுள்ளார். .
08:42 AM (IST) Mar 02
Erode East by Election Results 2023 Live: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மின்னனு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் வேட்பாளர் 1372, அதிமுக வேட்பாளர் 447 வாக்குகள் பெற்றுள்ளார்.
08:31 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் மொத்தமுள்ள 397 வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் 102 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 16 வாக்குகள் பெற்றுள்ளனர்.
08:03 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து இன்று வாக்கு எண்ணும் பணி தற்போது தொடங்கியது. முதலில் தபால் வாக்கு எண்ணப்படுகிறது.
07:07 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறவுள்ள நிலையில், காவல்துறையினர். அரசு ஊழியர்கள், முதியோர்கள் என 397 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படவுள்ளது
07:04 AM (IST) Mar 02
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, வாக்கு எண்ணும் மையத்தை சுற்றியுள்ள எலவு மலை, சுண்ணாம்பு ஓடை, சித்தோடு ஆகிய பகுதிகளில் உள்ள 7 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு