M.E, M.Tech உள்ளிட்ட தேர்வுகள் ஒத்திவைப்பு... அறிவித்தது அண்ணா பல்கலை.!!

Published : Feb 18, 2022, 10:14 PM IST
M.E, M.Tech உள்ளிட்ட தேர்வுகள் ஒத்திவைப்பு... அறிவித்தது அண்ணா பல்கலை.!!

சுருக்கம்

தொலைதூரக் கல்வியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான நேரடித் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

தொலைதூரக் கல்வியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான நேரடித் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால்,  தொலைதூரக் கல்வியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான நேரடித் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு மார்ச் 9 ஆம் தேதிக்கும், 21 ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு மார்ச் 10 ஆம் தேதிக்கும் தள்ளிவைக்கப்டுகிறது. சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்களுக்கு நேரடியான முறையில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அறிவிப்பு மாற்றப்பட்டு தற்போது தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்தல் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டும் நேரடியான முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் தினமான நாளைய தினம் நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் தொடங்கி கல்லூரி மாணவர்கள் வரையிலும் தேர்தல் தினத்தன்று அறிவிக்கப்பட்ட தேர்வுகள் மாற்றி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தேர்தலையொட்டி பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தொலைதூர கல்வி பொறியியல் மாணவர்களுக்கு பிப்ரவரி 20 ஆம் தேதி நடக்கவிருந்த நேரடித் தேர்வு மார்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் தேர்வு ஒத்திவைத்து அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 08 December 2025: 3500 ஆண்டுகள் பழமை.. காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்