ED RAID : செந்தில் பாலாஜி வீட்டிற்க்குள் புகுந்த அமலாக்கத்துறை.. மீண்டும் ED ரெய்டால் அதிர்ச்சியில் திமுக

By Ajmal Khan  |  First Published Feb 8, 2024, 10:34 AM IST

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மீண்டும் அமலாக்கத்துறை சோதனை

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக செந்தில் பாலாஜி மீது  அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அடுத்த ஒரு சில வாரங்களில் புழல் சிறையில் செந்தில் பாலாஜியை  அடைக்கப்பட்டார்.

Tap to resize

Latest Videos

அப்போது சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றியது. இந்தநிலையில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனையை தொடங்கியுள்ளது.  கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமேஸ்வரப்பட்டியில் உள்ள இல்லத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தாய் மற்றும் தந்தை வசித்து வருகின்றனர்.

 மீண்டும் சோதனை- திமுகவினர் ஷாக்

இந்த வீட்டில்  இன்று காலை 7.30 மணியளவில் அங்கு கேரளா பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த வீட்டிற்கு பல முறை வருமான வரித்துறை அதிகாரிகள்,  அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்ட  நிலையில் இன்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில்  ஈடுபட்டுள்ளது. திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

தமிழகத்திற்கு நிதி கொடுக்காத மத்திய அரசு...கிண்டல் செய்து பொதுமக்களிடம் அல்வா கொடுத்த திமுகவின் தரமான சம்பவம்

click me!