மிக்ஜாம் புயல் பாதிப்பால் டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்யாத நுகர்வோருக்கு அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் வசூலிக்க மின்சாரத்துறை சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு
மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேலும் வீடுகளில் இருந்து பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் 3 முதல் 4 நாட்கள் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெள்ள நீர் வடிந்த பிறகே மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மின் கட்டணம் செலுத்துவதில் அவகாசம் வழங்கப்பட்டது.
undefined
கடந்த 5 ஆம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த 1 மாத கால அளவிற்கு அவகாசம் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் வெள்ள பாதித்த மக்களை அதிர்ச்சி அடையவைக்கும் வகையில், புதிய அறிவிப்பை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின் கட்டணம் - கணக்கெடுப்பு பணி
அதன் படி, புயல் காரணமாக பல்வேறு வீடுகளிலும் தண்ணீர் தேங்கியதால் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்யாத நுகர்வோருக்கு அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் வசூலிக்க மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் அக்டோபர் மாதம் அதிகளவு மின்கட்டணம் செலுத்தியவர்கள் தற்போது அதே அளவான மின்கட்டணத்தை செலுத்து வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது அக்டோபர் மாத கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
இதையும் படியுங்கள்