4 தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு...!!!

First Published Nov 19, 2016, 11:21 AM IST
Highlights


இன்று நடைபெற்று வரும் 4 தொகுதியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இதில் 9 மணி வரை இதுவரை அரவக்குறிச்சி - 43.10%, தஞ்சாவூர் - 34.21%, திருப்பரங்குன்றம் - 36.01%, நெல்லித்தோப்பு-23% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3 தொகுதிகள், புதுச்சேரி நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தஞ்சாவூர் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 15 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிகிறது. தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி சரபோஜி கல்லூரியில் வாக்குப்பதிவு செய்து வெளியே வந்தார். அப்போது அவர் திமுகவுக்கு வெற்றி உறுதி என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தஞ்சையில் அதிமுக சார்பில் ரங்கசாமி, திமுக சார்பில் அஞ்சுகம் பூபதி, பாஜக சார்பில் ராமலிங்கம், தேமுதிக சார்பில் அப்துல்லா சேட் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

அரவக்குறிச்சியில் காலை 9 மணி நிலவரப்படி 21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ன. அரவக்குறிச்சியில் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜி, திமுக சார்பில் கே.சி.பழனிசாமி, பாஜக சார்பில் எஸ்.பிரபு, தேமுதிக சார்பில் முத்து உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ், திமுக சார்பில் சரவணன், பாஜக சார்பில் ஸ்ரீனிவாசன், தேமுதிக சார்பில் தனபாண்டியன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

4 தொகுதிகளிலும் காலை 7 மணியில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகிறன்றனர். பதிவான வாக்குகள் வரும் 22ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவை ஒட்டி துணை ராணுவப்படையினர், பறக்கும் படையினர், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

click me!