குஷ்பு கார் மீது முட்டை, தக்காளி வீசிய வழக்கு; ஜனவரி 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு...

First Published Jan 23, 2018, 9:58 AM IST
Highlights
egg tomato threw on kushpu car case postponed


சேலம்

சேலத்தில் குஷ்பு கார் மீது முட்டை, தக்காளி வீசிய வழக்கு விசாரணையை ஜனவரி 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் மேட்டூர் குற்றவியல் நீதித் துறை நடுவர்.

தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து திரைப்பட நடிகை குஷ்பு கூறிய கருத்துகளுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.  

இதனையடுத்து, சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்குரைஞர் அ.முருகன் குஷ்பு மீது குற்றவியல் நடவடிக்கை கோரி மேட்டூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால், குஷ்புவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் மேட்டூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான குஷ்பு, பிடியாணையை தளர்த்திக் கொண்டு காரில் திரும்பினார்.

அப்போது, அவர் கார் மீது முட்டை,  தக்காளி ஆகியவை வீசப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக, மேட்டூர் காவல் நிலையத்தில் அப்போதைய மேட்டூர் வட்டாட்சியர் பைஸ்முகமதுகான் புகார் அளித்தார்.  

அதனைத் தொடர்ந்து, மேட்டூர் காவலாளர்கள் ஏழு பெண்கள் உள்பட 41 பேர் மீது வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு நேற்று மேட்டூர் குற்றவியல் நீதித் துறை நடுவர் ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்க விசாரித்த நீதித்துறை நடுவர் வழக்கு விசாரணையை ஜனவரி 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

click me!