
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்தார். திமுக அமைச்சர்கள், திமுக அரசு செய்த ஊழல்களின் பட்டியலை ஆளுநரிடம் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “2021ம் ஆண்டு முதல் திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக ஆளுநரிடம் புகார் வழங்கி உள்ளோம். திமுக அரசின் ஊழல்களுக்கு முழுமையான ஆதாரம் இருப்பதால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
உயர்கல்வித்துறையில் 1500 கோடி, நகராட்சி நிர்வாகத்தில் 64000 கோடி, பத்திரப்பதிவு துறையிில் 20000 கோடி, சென்னை மாநகராட்சியில் 10000 கோடி, இந்து சமய அறநிலையத்துறையில் 1000 கோடி, டாஸ்மாக்கிலி் 50000 கோடி, நீர்வளத்துறையில் 17000 கோடி, எரிசக்தி துறையில் 50000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. மொத்தமாக ஆட்சி பொறுப்புக்கு வந்த 4.5 ஆண்டுகளில் 4 லட்சம் கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.
கடந்த 56 மாதங்களாக கார்ப்பரேட் நிறுவனம் போல் அதிகார வர்க்கத்தின் உச்சத்தில் இருக்கும் திமுக குடும்பம் கொடிக்கணக்கில் கொள்ளையடித்து தமிழ்நாட்டை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளியுள்ளது. மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை வரவேற்கிறோம். காரணம், அது அதிமுகவால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம். மாணவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக மடிக்கணினி வழங்காமல் தேர்தலுக்காக தற்போது திமுக அரசு வழங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.