டெங்குவை ஒழிக்க பொது மக்களே கொஞ்சம் கோ-ஆபரேட் பண்ணுங்க !! வாட்ஸ்அப்பில் வந்த எடப்பாடி !!!

Asianet News Tamil  
Published : Oct 21, 2017, 08:22 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
டெங்குவை ஒழிக்க பொது மக்களே கொஞ்சம் கோ-ஆபரேட் பண்ணுங்க !!  வாட்ஸ்அப்பில் வந்த எடப்பாடி !!!

சுருக்கம்

edappadi palanisami speak about dengu in watsapp

டெங்கு நோயை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க  வேண்டும் என்று முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி வாட்ஸ்அப்பில்  வாய்ஸ் கொடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 இந்நிலையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் பேசிய  ஆடியோ வாட்ஸ்அப் மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அனைவருக்கும் வணக்கம். டெங்கு கொசு நல்ல தண்ணீரில்தான் வளருகிறது. இந்த கொசு பகலில்தான் கடிக்கிறது.

 பொதுமக்கள் தங்கள் வீடுகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் புழுக்கள் வளராமல் தடுக்க, தாங்கள் சேமித்து வைக்கும் தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்கவும், வீடுகளின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை கருவிகள் உள்பட அனைத்து வசதிகளும் 24 மணி நேரமும் செயல்படுகிறது.

 காய்ச்சல் ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தக்க சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அரசு எடுக்கும் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை பொதுமக்கள் நல்க வேண்டும். ஏடிஎஸ் கொசுக்களை ஒழிப்போம், டெங்கு காய்ச்சலை தடுப்போம். நலமான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 29 December 2025: பரபரப்பான அரசியல் சூழலில் இன்று ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு..!
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை.. இதோ லிஸ்ட்..!