
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ரவுடிகள் துணையுடன் வெற்றி பெற்ற தினகரனை சென்னை தாதாவை ஸ்கெட்ச் போட்டது. ஆனால் சிக்கியது என்னவோ அல்லு சில்லுகள் தான். ஸ்கெட்ச் போடப்பட்ட மெயின் தாதா பின்னு தப்பித்துவிட்டார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரனை வெற்றி பெற வைத்தாக வேண்டும் என்பதற்காக தீவிரமாக வியூகம் வகுக்கப்பட்டது. என்னதான் பணம் விளையாடியது, ஹவாலா ஸ்டைல் பட்டுவாடா என சொன்னாலும் தேர்தலுக்கு முன்கூட்டியே சில பணிகளை தினகரன் அணி தீவிரமாக இறங்கியது.
வடசென்னயிலேயே நாங்கதான் மாஸ் என மதுசூதனன், அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் எம்.பி., பாலகங்கா, தற்போதைய எம்.பி.,க்கள் வெங்கடேஷ்பாபு, ஜெயவர்தன், சேகர்பாபு என கெத்து காட்டும் மெயின் தலைகள் இருந்தாலும், ரௌடிகளை வைத்தே அதிமுக நிர்வாகிகளை மிரட்டி தினகரனுக்கு வேலை வாங்கியது. என இந்த தாதாவின் கண்ணசைவில்தான் வடசென்னை ரவுடிகள் பலரும் தேர்தல் வேலையில் இறங்கியிருந்தார்கலாம். இதற்காக பெரிய தொகை கைமாறியிருக்கிறது.
வேட்ப்புமனு தொடங்கிய ஒரு சில தினங்களில் தினகரனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களை மிரட்டிய போதுதான் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி’யை தூக்கியது போலிஸ். ஆனாலும், அசராமல் ரவுடிகளை களத்தில் இறக்கி வெற்றியை வாங்க போராடியது தினகரன் டீம்.
இதே போலத்தான் வாக்குப் பதிவு நாள் வரை போலீஸ், துணை ராணுவம் என அசால்ட்டாக எதிர்கொண்டது. அதுவரை போலீசை சமாளிக்க ரவுடிகளைத்தான் நம்பியிருந்தது தினகரன் குரூப். பொதுமக்களை ரவுடிகள் கொண்டு மிரட்டியும் ஹவாலா முறையில் டோக்கன் கொடுத்து ஏமாற்றியும் அமோக வெற்றியை வாங்கியது தினகரன் அணி, தினகரனின் இந்த தில்லு முள்ளு வெற்றியால் அதிமுகவுக்கு பெரும் தலைகுனிவாகிப் போனது என அமைச்சர்களே தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ரவுடிகளின் பலத்தை வைத்துதான் தேர்தலில் வெற்றிபெறுவார் தினகரன் என அமைச்சர்களுக்கு முன்பே தெரிந்தாலும் சசிகலா மீதிருக்கும் பயத்தாலும் விசுவாசத்தாலும் யாரும் அதை பெரிதாக வெளிப்படுத்தவில்லை.
என்னதான் வட சென்னையில் நாங்கதான் மாஸ் என சொன்னாலும், அதிமுக நிர்வாகிகள் யாருமே இவருக்காக வேலை செய்யவில்லை காரணம் இந்த ரவுடிகள் தான். அதிகமாக வாக்குகள் அதிகமாக இருக்கும் வார்டுகளில் வேலைபார்க்கு அதிமுக நிர்வாகிகளை தனிமையில் சந்தித்து மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இப்படி ரவுடிளின் துணையோடு வென்றதால் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போன பன்னீரும் பழனியும் அதிர்ச்சியில் இருந்தார்கள். அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு முக்கிய அமைச்சர்கள்தான் காரணம் எனவும், தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் முதலமைச்சர் பழனிசாமிக்கு மதுசூதனன் கடிதம் ஒன்றை எழுதினார்.
இதனையடுத்து தினகரனின் மீதிருந்த கவனத்தைவிட அவரது வெற்றிக்குக் காரணமானவர்களை குறிவைத்தது. அது தற்போது வரை நாள் நீக்கம் ஆபரேஷன் தொடர்ந்து வருகிறது. இதனையடுத்து ரவுடி பினு மீது ஆபரேஷன் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்படுகிறது.
ஏனெனில் பினு ஆபரேஷனில் சிக்கிய பல ரவுடிகள் வடசென்னையை சேர்ந்தவர்கள். அதுவும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரனுக்காக வேலை பார்த்தவர்கள். இவர்களை ஒட்டுமொத்தமாக தூக்கி ரிவிட் அடிக்க ஒருமாதமாக ரகசிய ஆலோசனை நடத்தியிருக்கிறது சென்னை போலிஸ் டீம்.
75 ரவுடிகளைப் அலேக்காக தூக்கியிருக்கிறது போலீஸ். தினகரன் ஆட்சியை கவிழ்க்க ப்ளான் போட்டால் ரவுடிகளை வைத்து ஜெயித்ததை ரவுடிகளை வைத்தே தினகரனை வீழ்த்தவும் தயாராக இருக்கிறார்களாம்.