மருந்து கடைகளும் நாளை மூடப்படும்! முன்கூட்டியே மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்..!

First Published Apr 2, 2018, 4:26 PM IST
Highlights
Drug stores will be closed tomorrow!


வணிகர்கள் சங்கம் நடத்தும் நாளைய போராட்டத்தின்போது மருந்து கடைகளும் அடைக்கப்படும் என்பதால் பொதுமக்கள் முன்கூட்டியே மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் பிப்ரவரி 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது, 6 வாரக் காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. தீர்ப்பை தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய
அரசு மௌனம் காத்து வந்தது. மேலும், உச்சநீதிமன்றத்தின் கெடு கடந்த வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. 

உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறிய ஸ்கீம் என்ற வார்த்தைக்க விளக்கம் கேட்டு மத்திய அரசு நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தது. இது குறித்து இன்று விளக்கமளித்த உச்சநீரிமம்னறம், காவிரி தீர்ப்பில் செயல் திட்டம் தான் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் குறிப்பிடவில்லை என்று விளக்கமளித்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை, கடையடைப்பு போரட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்தார். திட்டமிட்டபடி நாளை கடையடைப்பு நடைபெறும் என்றும் அனைத்து தரப்பினரும்
ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்த நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொது செயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழக அனைத்து கட்சித் தலைவர்களுக்கும், தமிழக பெரு நிறுவனங்கள், தொழில் வளாக உரிமையாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் பேரமைப்போடு இணைந்த ஒருங்கிணைப்பு குழு விடுத்துள்ள வேண்டுகோளில், 3-4-2018 அன்று (நாளை) ஒரு நாள் கடையடைப்புக்கு ஓரணியில் திரண்டு ஆதரவளிக்கும்படி வேண்டுகோள் விடுத்ததாக அதில்
கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவு ஒட்டுமொத்த தமிழக நலன், விவசாயிகள் மற்றும் வணிகர்கள் நலன் கருதி மட்டுமே அன்றி எந்த தனிப்பட்ட லாப நோக்கத்திற்காகவும் இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தின்போது மருந்து கடைகளும் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கம்அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மருந்துகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளவும், அவசர மருந்து தேவைகளுக்கு 044-28191522 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

click me!