விசாரணைக்கு எப்போ, எங்கே வரணும்? ஆவேசமான அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி…

 
Published : Feb 04, 2017, 07:41 AM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
விசாரணைக்கு எப்போ, எங்கே வரணும்? ஆவேசமான அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி…

சுருக்கம்

விசாரணைக்கு எப்போ, எங்கே வரணும்? ஆவேசமான அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி…

ஜெயலலிதா மரணம் தொடர்பாக எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக உள்ளதாக அப்பல்லோ  மருத்துமனை தலைவர் பிரதாப் ரெட்டி சவால் விடுத்துள்ளார்..

முன்னாள் முதலமைச்ச்ர் ஜெயலலிதா கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அங்கு தொடர்ந்து 75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீர் மாரடைப்பு காரணமாக  டிசம்பர் 5ம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அவரது மரணம் ,அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டன.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவனைக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

ஜெயலலிதா நன்றாக இருக்கிறார், சாப்பிடுகிறார், நடைபயிற்சி மேற்கொள்கிறார் என பல செய்திகள் அதிமுக கட்சியினரின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் மூலமே வெளியிடப்பட்டன.

ஆனால் திடீரென ஜெயலலிதா மரணமடைந்தது அக்கட்சி தொண்டர்களை ஆத்திரம் அடையச் செய்தது.அவரின் இறப்பு தொடர்பாக உடனடியாக உண்மையை தெரிவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

திமுக உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகளும் ஜெயலலிதாத மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்

இந்நிலையில்  சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்பல்லோ மருத்துவமனை  தலைவர் பிரதாப் சி.ரெட்டி, செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக எந்த விவரத்தையும் விசாரணையின் போது வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணையை பொறுத்தவரை அப்பலோ மருத்துவமனையின் நிலை திறந்த புத்தகமாகவே உள்ளது என்றும் . ஜெயலலிதா மரணம் தொடர்பாக எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் உடல்நிலை நன்கு தேறிவந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்ட அந்த ஒரு நிமிடம் மட்டுமே பின்னடைவை சந்தித்ததாகவும், அவரது உடல்நிலையில், எந்த பிரச்னையுமில்லைஎன தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் கால்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறு என்றும் பிரதாப் ரெட்டி கூறினார்.

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்