ரயில்வே பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் - மதுரை கோட்டத்தில் பரபரப்பு சம்பவம்

 
Published : Jun 01, 2017, 06:24 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
ரயில்வே பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் - மதுரை கோட்டத்தில் பரபரப்பு சம்பவம்

சுருக்கம்

Double salary for Madurai division Railway employees

ரயில்வே பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் - மதுரை கோட்டத்தில் பரபரப்பு சம்பவம்

ரயில்வே ஊழியர்களுக்கான சம்பவம், நேற்று அதிகாலையில் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. கணக்கு பிரிவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, நடந்தது என கூறி, அந்த பணத்தை 4 மணி நேரத்துக்கு பின், ரயில்வே நிர்வாகம், வங்கியில் இருந்து அந்த பணத்தை திரும்ப எடுத்து கொண்டது.

ரயில்வே ஊழியர்களுக்கு மாந்தோறும் 28ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும். மதுரை ரயில்வே கோட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலையில், மதுரை ரயில்வே ஊழியர்களுக்கான சம்பள தொகை, அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

அதிகாலை 5 மணிக்கு அவரவர் வங்கி கணக்கில் சம்பளம் ஏறியதற்கான எஸ்எம்எஸ், செல்போன்களில் வந்தது. இதனால், ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.

காரணம், பலருக்கு சம்பளம் இரட்டிப்பு தொகையாக வங்கி கணக்கில் சேர்ந்துவிட்டது. இதை நம்ப முடியாமல் திகைத்த ஊழியர்கள் ஒருவொருக்கொருவர் போன் செய்து விசாரித்து கொண்டனர்.

சில ஊழியர்கள் அதிகாலை 5 மணி முதலே ஏடிஎம்களுக்கு சென்று சம்பளத்தை முழுமையாக எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

சில ஊழியர்கள் நமக்கு இவ்வளவு கூடுதலாக சம்பள உயர்வு செய்துவிட்டார்களா என ஆச்சரியத்தில் மூழ்கினர்.

பின்னர், மதுரை கோட்டத்திற்கு போன் செய்து உயர் அதிகாரிகளை விசாரிக்கும் பணியில் அவர்கள் இறங்கினர்.

அதில், நேற்று அதிகாலை 5 மணிக்கு சம்பளத்திற்கு குறுஞ்செய்தி வந்தவுடன் வழக்கம்போல் சில ஊழியர்கள் அதை கண்டு கொள்ளாமல், வழக்கமான சம்பளம்தானே மாலையில் போய் எடுத்து கொள்வோம் என இருந்தனர்.

ஆனால், கணக்கு பிரிவில் நடந்த குளறுபடியால் இந்த தவறு நடந்துள்ளது என தெரிவித்தனர்.

விளக்கம் கொடுத்தது அதிகாரிகள் தரப்பு, சரியாக 9 மணிக்கு தவறை உணர்ந்த மதுரை கோட்ட அதிகாரிகள், ஊழியர்களின் சம்பளத்தை விட கூடுதல் தொகையை வங்கி கணக்கில் இருந்து மீட்க தொடங்கினர்.

இதனால் சில ஊழியர்களால் இரட்டிப்பு தொகையை கைப்பற்ற முடியாமல் போனது. முழு தொகையையும் எடுத்தவர்களிடம் பணத்தை திரும்ப பெற நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

 

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!