
யாரும் மெரினாவிற்கு போகாதிங்க .....!!! மெரினாவிற்கு வந்த சோதனை ....!!
மெரினாவிற்கு என்ன போதாதகாலமோ தெரியவில்லை.கடந்த சில வாரங்களாகவே மெரீனா கடற்கரையை மையப்படுத்திய செய்திகள் தான் ஊடகங்களில் தலைப்பு செய்தியாகி வருகிறது.
வர்தா புயல் கோர தாண்டவம் , அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களின் தென்னெழுச்சி போராட்டம் , போலிஸ் தடியடி என பரபரப்பாக இருக்கும் மெரீனா கடற்கரைக்கு தற்போது, கச்சா எண்ணெய் வடிவில் வந்துள்ளது ஒரு புதிய சோதனை...!
கப்பல் மோதியது :
எண்ணூர் துறைமுகம் அருகே 2 கப்பல்கள் மோதிய விபத்தில் கப்பலின் டீசல் எண்ணெய் கடலில் கசிந்துள்ளது. இந்த எண்ணெய் சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் அதிகளவில் மிதந்து காணப்படுகிறது.
செத்து மிதக்கும் உயிரினம் :
இந்த விபத்தால், தற்போது வரை 4 கடல் ஆமைகள், ஏராளமான மீன்கள் செத்து கரையொதுங்கியுள்ளன என்பது குறிபிடத்தக்கது.மேலும் , இந்த டீசல் சுமார், 200 மீட்டர் தூரத்துக்கு கடற்கரையோர கற்களில் டீசல் படிந்து உள்ளது என்பது குறிபிடத்தக்கது.
மனிதர்களுக்கும் பேராபத்து :
தற்போது மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்தாலும், சுற்றுலா பயணிகள் மற்றும் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு மட்டும் எந்த தடையும் இல்லை என்பது ஒரு பக்கம், இந்நேரத்தில் கச்சா எண்ணெய் கசிவும் நடந்துள்ளது என்பது மறுபக்கம்.
கடற்கரையோரத்தில், உள்ள கற்களில் கசிவு படிந்துள்ளது அதுமட்டுமில்லாமல், கடல் நீரில் அதிகளவு , கச்சா எண்ணெய் கலந்துள்ளதால், கடல் நீர் கருமையாக காணப்படுகிறது.
இந்த எண்ணெய் படலத்தால் ஒரு விதமான நாற்றம் வீச தொடங்கியுள்ளது. தெரியாமல் நம் காலில் பட்டாலும் அதனை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமானதும் கூட. அதே வேளையில் , இந்த ஒரு விதமான நாற்றத்தால், சுவாச கோளாறும் ஏற்படும் அபாயம் உள்ளது.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல பயம் :
மேலும், மீனவர்கள் கடைக்குள் மீன் பிடிக்க செல்வதற்கும் பயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு செல்லும் போது , தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதாக கருதப்படுவதால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை என தெரிகிறது.
மீன்கள் உயிரிழக்கும் அபாயம் :
ஏற்கனவே , ஆமை உள்ளிட்ட பல வகையான மீன்கள் செத்து கரை ஒதுங்கிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்னும் எவ்வளவு மீன்கள் உயிரிழக்க கூடுமோ என்ற அச்சம் மீனவர்களிடையே ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.