"ஐயா... கோக் பெப்சியை தடை செய்து எங்களை பைத்தியம் ஆக்காதீர்கள்" - மது குடிப்போர் சங்கம் காமெடி கோரிக்கை

 
Published : Jan 30, 2017, 12:30 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
"ஐயா... கோக் பெப்சியை தடை செய்து எங்களை பைத்தியம் ஆக்காதீர்கள்" - மது குடிப்போர் சங்கம் காமெடி கோரிக்கை

சுருக்கம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் ஒரு பகுதியாக மார்ச் 31 முதல் கோக்,பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று வணிகர் சங்கங்கள் தீர்மானித்து உள்ளனர்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்து மது சங்கம் விழிப்புணர்வு சங்கம் வைத்துள்ள கோரிக்கை நகைச்சுவையாக பார்க்கப்படுகிறது.

இந்தியா ஜனநாயக நாடு தேசத்தை பாதிக்காத வகையில் யாரும் எதுவும் செய்யலாம்.கட்சி சங்கங்கள் அமைக்கலாம் என்ற உரிமை உள்ளது.

அந்த அடிப்படையில் மது குடிப்பவர்களும் ஒரு சங்கத்தை வைத்துள்ளனர்.

மது குடிப்பதற்கு ஆதரவாக இவர்கள் வைக்கும் கோரிக்கைகள் விநோதமாகவும், நகைச்சுவையாகவும் இருக்கும்.

கொரட்டூரில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. செல்லபாண்டியன் என்பவர் இதன் நிர்வாகியாக உள்ளார்.

சமீபத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் தமிழகமெங்கும் எழுச்சியாக நடைபெற்றது.

இதில் முக்கிய கோரிக்கையாக வெளிநாட்டு குளிர்பானங்களை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதையடுத்து மார்ச் 31 முதல் கோக் பெப்சி குளிர்பானங்களை விற்க மட்டோம் என்று விக்கிரமராஜா, வெள்ளையன் தலைமை தாங்கும் வணிகர் சங்கங்கள் அறிவித்தன.

இதையடுத்து மது குடிப்போர் சங்கத்தின் சார்பில் வினோத அறிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

அதில் கோக் பெப்சிக்கு 31 முதல் தடை விதித்துள்ளனர்.

நாங்கள் மது அருந்துவோர் இதுவரை கோக் பெப்சி கலந்துதான் குடித்து வந்தோம். அது எங்களுக்கு மன நிறைவாக இருந்தது.

தற்போது இந்த தடையால் எங்களுக்கு மனநிலை பாதிக்கப்படும். ஆகவே ஜூன் மாதம் வரை விற்பனையை நீட்டிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த வினோத நகைச்சுவை அறிக்கையை பிரசுரிப்பதா வேண்டாமா இவர்கள் சீரியசாகத்தான் கோரிக்கை வைக்கிறார்களா அல்லது காமெடி செய்கிறார்களா என்று வடிவேல் பாணியில் செல்லபாண்டியனுக்கு பத்திரிக்கை ஆசிரியர்கள் போன் போட்டு விசாரித்து வருகிறார்களாம்.

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?