வாடும் மக்களுக்கு உதவி செய்க.. இயன்ற தொகையை நன்கொடையாக வழங்குக.. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்..

Published : May 03, 2022, 03:13 PM ISTUpdated : May 03, 2022, 04:51 PM IST
வாடும் மக்களுக்கு உதவி செய்க.. இயன்ற தொகையை நன்கொடையாக வழங்குக.. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்..

சுருக்கம்

இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் வாடும்‌ மக்களுக்கு உதவிடும்‌ வகையில்‌ நல்லெண்ணம்‌ கொண்ட அனைவரும்‌ நம்மால்‌ இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம்‌ இது என்று அவர் தெரிவித்துள்ளார்.  

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இலங்கையில்‌ தற்போது நிலவி வரும்‌ கடும்‌ பொருளாதார சூழ்நிலையில்‌ கடும்‌ சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ மற்றும்‌ உயிர்‌ காக்கும்‌ மருந்துகள்‌ அனுப்பி வைக்கப்படும்‌ என்று அறிவித்து இருந்தேன்‌. இதற்கான ஒன்றிய அரசின்‌ அனுமதியும்‌ தற்போது கிடைத்துள்ளது. 

இதன்‌ முதற்கட்டமாக தமிழ்நாட்டில்‌ இருந்து 40 ஆயிரம்‌ டன்‌ அரிசி, 500 டன்‌ பால்‌ பவுடர்‌ மற்றும்‌ உயிர்காக்கும்‌ மருந்துகள்‌ விரைவில்‌ அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்த சூழ்நிலையில்‌ வாடும்‌ மக்களுக்கு உதவிடும்‌ வகையில்‌ நல்லெண்ணம்‌ கொண்ட அனைவரும்‌ நம்மால்‌ இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம்‌ இது. எனவே மனிதாபிமான அடிப்படையில்‌, இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள்‌ வழங்கிடுமாறு அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

நீங்கள்‌ வழங்கிடும்‌ உதவிகள்‌ இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும்‌ என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை