உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எஸ்எம்எஸ் வந்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எஸ்எம்எஸ் வந்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார் உங்கள் மின் கட்டணம் கட்டவில்லை அதனால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என யாராவது மெசேஜ் அனுப்பினால் அதற்கு ஒருபோதும் பதில் தராதீர்கள் என அவர் அறிவுறுத்தி உள்ளார். இது பணம் பறிக்கும் கும்பல் இன் மோசடி யுத்தி என்றும் அவர் கூறியுள்ளார்.
தொழில்நுட்பம் வளர வளர அதை வைத்து மோசடிகளும் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் சென்னையில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஒரு வார காலமாக சில தெரியாத எண்களில் இருந்து உங்கள் மின் கட்டணம் செலுத்த படாததால் இரவு 10:30 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என போலி எஸ்எம்எஸ்கள் வந்த வண்ணம் உள்ளது. வரும் குறுஞ்செய்திகள் அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளன. அது இபி அலுவலகத்தில் இருந்து அனுப்பப் படுவதாகவும், தேவைக்கு கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை பார்க்கும் சிலர் இதற்கு போன் செய்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். பலர் மின் கட்டணம் செலுத்திய பிறகும் இது போன்ற மெசேஜ் வருவதால் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். அந்த மெசேஜ்ல் வரும் தொலைபேசி எண்ணுக்கு கால் செய்ய முயற்சித்து வருகின்றனர். ஆனால் அது போன்று வரும் குறுஞ்செய்திகளை புறக்கணிக்க வேண்டும், அது பணம் பறிக்கும் முயற்சி என தமிழக காவல்துறை டிஜிபி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
இதையும் படியுங்கள்: ஆட்டுகறி சமைப்பதில் கணவன் மனைவி இடையே சண்டை .. தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் அடித்து கொலை.
பலவிதமான மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு காவல்துறையின் சார்பில் எச்சரிக்கை கொடுத்து வருகிறோம், இது போல சமீபத்தில் ஒரு மோசடி வந்துள்ளது. இதுதான் மின் கட்டண மோசடி உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும் அதில் வாடிக்கையாளரே இது மின்சார வாரியத்தில் இருந்து வந்த மெசேஜ் நீங்கள் முதல் மின் கட்டணத்தை செலுத்தாததால் உங்கள் மின் இணைப்பு இன்று இரவு 10:30 மணிக்கு துண்டிக்கப்படும் என்று வரும், மேலும் மின் இணைப்பு துண்டிக்கப் படாமல் இருக்க மின்சார வாரியத்தையும் அதிகாரிகள் அனுக என ஒரு மெசேஜ் வரும், அதில் ஒரு போன் நம்பரும் இருக்கும். அந்த எண்ணுக்கு நீங்கள் போன் செய்தால் மறுமுனையில் பேசும் நபரிடம் நீங்கள் உங்கள் மின் கட்டணத்தை செலுத்தி விட்டீர்கள் என்று கூறினால், அதற்கு அந்த நபர் உங்கள் ஸ்கின் ஷாட்டை அனுப்புங்கள் என்று சொல்லுவார்.
நீங்கள் ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பிய சில நிமிடங்களில் மின்வாரியத்தில் இருந்து பேசுவதாக அழைப்பார்கள், நீங்கள் மின் கட்டணம் செலுத்தியது எங்கள் கம்ப்யூட்டரில் அப்டேட் ஆகவில்லை, எனவே நாங்கள் சொல்லும் ஒரு ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள், அதில் வெறும் 10 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும் உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என கூறுவார்கள். தப்பித் தவறி கூட நீங்கள் அந்த ஆப்பை டவுன்லோட் செய்து விடக்கூடாது, அப்படி நீங்கள் செய்தால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து சிறுக சிறுக பணம் சென்று கொண்டே இருக்கும். உங்கள் போனில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் OTPயை அவர்களால் பார்க்க முடியும். எனவே இதுபோன்ற ஒரு மெசேஜ்களை தவிர்த்துவிடுங்கள். இது போல யாராவது மெசேஜ் அனுப்பினால் காவல்துறைக்கு தகவல் அளியுங்கள்.
இதையும் படியுங்கள்: வீட்டிற்க்குள் நுழைந்து திருமணமான இளம் பெண்ணை கதற கதற கற்பழித்த 60 வயது முதியவர்.. 17 ஆண்டு சிறை.
100, 112 உள்ளிட்ட எங்களுக்கு தகவல் சொல்லுங்கள், இல்லாவிட்டால் காவல் உதவி செயலிக்கு தகவல் மட்டும் கொடுங்கள். அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து இருக்கிறோம், விரைவில் பிடித்து விடுவோம். நீங்கள் யாராவ்வது இழக்கும் பணம் இந்தியாவில் இருந்தால் நாங்கள் மீட்டுக் கொடுப்போம், ஒரு வேலை அது வெளிநாட்டு மோசடி என்றால், அக்கும்பலை கைது செய்தாலும் பணத்தை மீட்க முடியாது, இந்த விஷயத்தில் பொதுமக்களாகிய நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு சைலேந்திரபாபு கூறியுள்ளார்.