‘நாய் பிரியாணி எஃபெக்ட்’ ’சண்டே’யில கூட ஈ ஓட்டும் அசைவ ஓட்டல்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்

By manimegalai aFirst Published Nov 18, 2018, 12:53 PM IST
Highlights

நேற்று சென்னைக்கு ராஜஸ்தானிலிருந்து வந்த 1,190 கிலோ நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அசைவ ஹோட்டல்களின் வியாபாரம் படுமந்தமாகிவிட்டது. இதைத்தொடர்ந்து ஹோட்டல் முதலாளிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.


நேற்று சென்னைக்கு ராஜஸ்தானிலிருந்து வந்த 1,190 கிலோ நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அசைவ ஹோட்டல்களின் வியாபாரம் படுமந்தமாகிவிட்டது. இதைத்தொடர்ந்து ஹோட்டல் முதலாளிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நாய்க்கறி பிரியாணிதான் நேற்று வலைதளங்களின் பரபரப்பான டாபிக். காக்கா பிரியாணி குறித்து நடிகர் விவேக் ஒரு படத்தில் அடித்த ஜோக்கைப் பின்பற்றி ‘அடேய் நாய்க்கறி பிரியாணி  சாப்பிட்டா வள்வள்தாண்டா... உன்னிக்கிருஷ்ணன் குரலாடா வரும்? என்று நெட்டிசன்கள் கலாய்த்துக்கொண்டிருந்தவேளையில்,  பெரும் துயரத்துக்கு ஆளாகியிருப்பவர்கள் சென்னையின் நடுத்தர அசைவ ஹோட்டல் உரிமையாளர்கள்தான்.

எதிர்பார்த்ததுபோலவே இறக்குமதி செய்யப்பட்ட நாய்க்கறி எந்தெந்த ஹோட்டல்களுக்காக வந்தது என்பது மூடி மறைக்கப்பட்ட நிலையில், மக்கள் அசைவ ஹோட்டல்கள் எதையும் நம்பத்தயாராக இல்லை. நேற்றே  பல ஹோட்டல்கள் வியாபாரமின்றி ஈ ஓட்டிய நிலையில், அமோக வியாபாரம் நடக்கும் ஞாயிறன்று கூட பல ஹோட்டல்களில் சுத்தமாக வியாபாரமே இல்லை.

அதிலும் குறிப்பாக கிலோ பிரியாணி 100 ரூபாய்க்கும் விற்கும் கடைக்காரர்கள் நேற்று நடந்த மந்தமான வியாபாரத்தை ஒட்டி இன்று விடுமுறை விட்டுள்ளனர். இதேபோல் பிளாட்ஃபார்ம் கடைக்காரர்களும் வியாபாரமின்றி புலம்பிக்கொண்டு திரிகின்றனர்.

click me!