யானை கர்ப்பமாக இருப்பது கூட தெரியாமல் சிகிச்சை அளித்த காமெடி வன மருத்துவர்கள் - குட்டி போட்டவுடன் கண்டு பிடித்தனர் புத்திசாலிகள்

Asianet News Tamil  
Published : Oct 25, 2016, 03:18 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
யானை கர்ப்பமாக இருப்பது கூட தெரியாமல் சிகிச்சை அளித்த காமெடி வன மருத்துவர்கள் - குட்டி போட்டவுடன் கண்டு பிடித்தனர் புத்திசாலிகள்

சுருக்கம்

கோவை, பெரிய தடாகம் அருகே உள்ள வனப்பகுதியில் பெண் யானை ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக் கோளாறு காரணமாக நடக்க முடியாமல் கீழே விழுந்தது.

யானைக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்கோளாறுக்கு, வனத்துறையினர்  சிகிச்சை அளித்தனர். ஆனாலும், யானை நடக்க முடியாமல் தவித்து வந்தது. இதையடுத்து, யானையை முகாமில் வைத்து பராமரிக்க, வனத்துறையினர் யானையை வாகனத்தில் கொண்டு சென்றனர்.

யானை என்ன காரணத்தால் சோர்வாக இருக்கிறது என்று நான்கு நாட்களாக மருத்துவர்கள் சோதனை நடத்தினர். அதற்கு வேண்டிய சிகிச்சைகள் அளித்தனர்.  முகாம் கொண்டு சென்ற பிறகு, யானைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். 

யானைக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று திடீரென யாஅனை எழ முடியாமல் மீண்டும் சோர்ந்து விழுந்தது. இதனால் யானைக்கு என்ன பிரச்சனை என்று தெரியாமல் வனத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறினர்.

யானையின் சோர்வுக்கு காரணம் என்ன என்ன வகையான சிகிச்சை அளிக்கலாம் என்று கூடி ஆலோசனை நடத்தினர். ஆனாலும் யானைக்கு என்ன நோய் என்று அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. 

இந் நிலையில் இன்று காலை சோர்ந்து கிடந்த யானை பிளிறியது , பின்னர் அழகான்  ஆண் யானை குட்டி ஒன்றை ஈன்றது. இதை பார்த்தவுடன் தான் புத்திசாலி வன மருத்துவர்களுக்கு யானை கர்ப்பம் காரணமாகத்தான் சோர்ந்து கிடந்துள்ளது தெரிந்துள்ளது. அதன் பிறகு யானைக்கு சிகிச்சை? அளித்தனர்.

 தற்போது தாய் யானையும், குட்டி யானையும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு விலங்குக்கு என்ன பிரச்சனை என்று கூட தெரியாமல் குட்டி போட்டவுடன் யானை கர்ப்பமாக இருக்கிறது என்று கண்டு பிடித்த இவர்கள் திறமையை என்னவென்று சொல்வது என இதை வேடிக்கை பார்த்த பொதுமக்கள் தலையில் அடித்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்