திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் தமாகா - ஜி.கே. வாசன் பேட்டி

Asianet News Tamil  
Published : Oct 25, 2016, 02:54 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் தமாகா - ஜி.கே. வாசன் பேட்டி

சுருக்கம்

காவிரி மேலாண்மை அமைப்பது குறித்து, திமுக நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமாகா பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டாதது வருத்தமளிக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கோரிக்கையை அரசு ஏற்றிருக்க வேண்டும்.

காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, திமுக சார்பில் நாளை நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமாகா சார்பில் நானும் கட்சியின் முக்கியத் தலைவர்களும் பங்கேற்போம்.

தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில்  போட்டியிடுவது பற்றி நாளை மறுநாள் தமாகா அறிவிக்கும் என்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

சங்கே முழங்கு.. 2026-ல் பாருங்க! சங்கி குழுவுடன் தமிழ்நாடே இணையப் போகுது.. தமிழிசை சவால்!
பராசக்தி படம் எப்படி இருக்கு? கனிமொழி கொடுத்த ‘பளீச்’ பதில்!