"கார்ப்பரேட் துறைக்கு உதவுவதே எம்சிஐ திட்டம்" - போராட்டத்தை தொடரும் மருத்துவர்கள்

First Published May 3, 2017, 3:28 PM IST
Highlights
doctors protest against mci


முதுநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கையில், கோரிக்கைகள் தொடரும் வரை போராட்டம் நடைபெறும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

முதுநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை நேற்றோடு முடிவடைந்தது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், மற்றும் சுப்பிரமணியன் இரு வேறு மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர்.

மருத்துவ கவுன்சில் விதிப்படி புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி சுப்ரமணியனும், 50 % இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வதாக நீதிபதி சசிதரனும் கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியது:

கிராமங்களில் மருத்துவர்கள் பணிபுரிவதை ஊக்குவிக்கவே இட ஒதுக்கீடு வழங்கபடுகிறது.35 ஆண்டுகளாக 50 சதவீதம் இட ஒதுக்கீடு அமலில் உள்ளது.

இட ஒதுக்கீட்டை மறுப்பது கிராமப்புற மருத்துவ சேவையை பாதிக்கும்.கார்ப்பரேட் துறைக்கு உதவுவதே மருத்துவ கவுன்சிலின் திட்டம்.

வடமாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதியே இல்லை.தென் மாநில அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது.

மக்கள் வரிப்பணத்தில் சிறப்பான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.எங்களுக்கு ஆதரவான தீர்ப்பு வரும் வரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

click me!