
மருத்துவ மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்ககோரி அரசு மருத்துவர்கள் நடத்தும் போராட்டம் வாபஸ் பெறுவது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது.
மருத்துவ மேற்படிப்பில் 50 % இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மருத்துவ கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது.
இதுகுறித்து மருத்துவர்கள் ரத்தை தடை செய்து உத்தரவிட்டகோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் மருத்துவ மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில், இதுகுறித்த பேச்சுவார்த்தை தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.