சிறப்பு பூஜை என்ற பெயரில் பக்தர்களிடம் பணம் பறிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

First Published Jun 5, 2018, 1:22 PM IST
Highlights
Do not snatch the money from pilgrims - High Court Order


கோயில்களில் சிறப்பு பூஜை என்ற பெயரில் பக்தர்களிடம், அர்ச்சகர்கள் பணம் பறிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தைத் தொடரந்து, தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் உள்ள கடைகளை அகற்றுமாறு கடை உரிமையாளர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கோயில் வளாகத்தில் கடை நடத்துவோருக்கு மாற்று இடம் ஒதுக்குமாறு தொடர்பாக மார்ச் 16 ஆம் தேதிக்குள், பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

இந்த நிலையில் கடை வியாபாரிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அவகாசத்தை நீட்டித்துள்ளது. மேலு, தமிழக கோயில்களில் உள்ள கடைகளை காலி செய்ய டிசம்பர் 31 ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு பூகைள் என்ற பெயரில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பறிப்பதாக உச்சநீதிமன்றம் மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு நீதிமன்றம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது கோயிலில் சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் அர்ச்சகர்கள், பக்தர்களிடம் பணம் பறிக்கக் கூடாது என்றும், ஏழை - பணக்காரர் என்ற பாகுபாடின்றி ஒரே விதமான அனைத்து பக்தர்களையும் கோயில் நிர்வாகம் நடத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

click me!