சேலத்தில் வருகிற 17 ஆம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெறுவதற்கான பணி நடைபெற்று வரும் நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பால் மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக இளைஞர் அணி
1980-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்காவில் திமுக இளைஞரணி முறைப்படி தொடங்கப்பட்டது. 1983-ம் ஆண்டில் இளைஞர் அணியின் மாநிலச் செயலாளராக மு.க.ஸ்டாலின் உயர்த்தப் பட்டார். இதனையடுத்து இளைஞர் அணியின் முதல் மாநாடு நெல்லையில் 2007ஆம் ஆண்டு நடைபெற்றது. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இளைஞர் அணி செயலாளராக மு.க.ஸ்டாலின் இருந்து வந்தார். இதனையடுத்து திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டதையடுத்து அப்பதவிக்கு அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் நியமிக்கப்பட்டார். சிறிது காலத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டது.
undefined
சேலம் மாநாடு ஒத்திவைப்பு
இதனையடுத்து திமுக இளைஞர் அணியை வலுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட உதயநிதி, டிசம்பர் 17 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், இரு சக்கர பேரணி தொடங்கப்பட்டது. இந்தநிலையில் சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பால் நிவாரணப்பணிகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேலும் அமைச்சர்களும் ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வருகிற 17 ஆம் தேதி நடைபெற இருந்த மாநில மாநாட்டை ஒத்திவைத்து திமுக தலைமை அறிவித்துள்ளது.
இளைஞர் அணி மாநாடு - புதிய தேதி அறிவிப்பு
இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக இளைஞர் அணி மாநாடு டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமை சார்பாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. "மிக்ஜாம்” புயலால் பெய்த பெருமழை - வெள்ளம் காரணமாக, சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, மழை - வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், வருகிற 17-12-2023 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட “தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு” தேதி மாற்றப்பட்டு, வருகிற 24-12-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்