உச்சக்கட்ட பரபரப்பு... திமுக பொருளாளர் வீட்டில் கொள்ளை... சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை தீவிரம்!!

Published : Jan 19, 2022, 05:55 PM IST
உச்சக்கட்ட பரபரப்பு... திமுக பொருளாளர் வீட்டில் கொள்ளை... சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை தீவிரம்!!

சுருக்கம்

திராவிட முன்னேற்ற கழகத்தில் பொருளாளரும் எம்.பியுமான டி.ஆர்.பாலு வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திராவிட முன்னேற்ற கழகத்தில் பொருளாளரும் எம்.பியுமான டி.ஆர்.பாலு வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தில் பொருளாளரும் எம்.பியுமான டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமான வீடு ஒன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தளிக்கோட்டை கிராமத்தில் உள்ளது. இவரது மகன் டி.ஆர்.பி ராஜா மன்னார்குடி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். அவரது வீடும் அதே பகுதியில் அமைந்துள்ளது.

இந்த நிலையில் இங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வந்தவர்கள் கும்பலாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

கொள்ளை நடந்த வீட்டில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கொள்ளை போன பொருட்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. இதனிடையே திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து காவல்துறையினர் கொள்ளை நிகழ்ந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்