காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாமக்கல்லில் திமுக ஆர்ப்பாட்டம்...

 
Published : Apr 02, 2018, 10:08 AM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாமக்கல்லில் திமுக ஆர்ப்பாட்டம்...

சுருக்கம்

DMK protest in Namakkal urging to set up Cauvery Management Board

நாமக்கல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாமக்கல்லில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, நாமக்கல் மாவட்டம், மணிக்கூண்டு அருகே கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன் தலைமை தாங்கினார். இதில் நகர பொறுப்பாளர் மணிமாறன், மாநில நிர்வாகி நக்கீரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கணேசன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் பூபதி, 

மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர்கள் மோகன், மார்டின் கிறிஸ்டோபர் மற்றும் நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!