சுடச்சுட ரெடியாகும் திமுக தேர்தல் வாக்குறுதிகள்! கனிமொழி தலைமையில் தயாராக போகும் தேர்தல் நாயகன்!

Published : Dec 17, 2025, 04:57 PM IST
Kanimozhi MP

சுருக்கம்

DMK Election Manifesto: திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க கனிமொழி எம்.பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் பாஜக தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகிறது. திமுக, அதிமுக என எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் அக்கட்சி தேர்தலில் வெல்ல முக்கிய பங்கு வகிப்பது தேர்தல் ஆணையம். திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சியை பிடிக்க தேர்தலில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் முக்கிய பங்கு வகித்துள்ளன.

திமுக தேர்தல் அறிக்கை

திமுகவின் தேர்தல் அறிக்கையை தேர்தல் நாயகன் என அக்கட்சி பெருமையுடன் கூறி வருகிறது. இந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க கனிமொழி எம்.பி தலைமையில் குழு அமைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுநலச் சங்கங்கள் இளைஞர்கள் விவசாய அமைப்புகள் தொழிலாளர் அமைப்புகள் வணிக அமைப்புகள் தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்திட தலைமைக் கழகத்தால் அமைக்கப்பட்ட குழுவினர் விவரம்:

கனிமொழி தலைமையில் குழு

தலைமை திருமதி கனிமொழி கருணாநிதி, (துணைப் பொதுச்செயலாளர்)

திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் (செய்தித் தொடர்பு தலைவர்)

முனைவர் கோவி.செழியன் (வர்த்தகர் அணி துணைத் தலைவர்)

முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளர்)

முனைவர் டி.ஆர்.பி. ராஜா, (தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர்)

திரு.எம்.எம். அப்துல்லா (அயலக அணிச் செயலாளர்)

பேரா. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (செய்தித் தொடர்பு செயலாளர்)

மருத்துவர் எழிலன் நாகநாதன் (மருத்துவ அணிச் செயலாளர்)

திரு கார்த்திகேய சிவசேனாபதி (சுற்றுச்சூழல் அணிச் செய்லாளர்!

திருமதி. ஆ.தமிழரசி ரவிக்குமார் (மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்

திரு. ஜி.சந்தானம் (இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு)

திரு. சுரேஷ் சம்பந்தம் (ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு)

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் டிவி கே...! எம்.பி. கனிமொழி அதிரடி பேட்டி
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!