100 நாள் வேலையில் முதலில் காந்தி பெயரையே வைக்கவில்லை.. தனி உலகில் வாழும் ஸ்டாலின்.. அண்ணாமலை அட்டாக்!

Published : Dec 17, 2025, 02:57 PM IST
Annamalai vs MK Stalin

சுருக்கம்

100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதி திட்டத்தின்படி கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கி விட்டு விகாசித் பாரத் உத்தரவாத வேலைவாய்ப்பு திட்டம் (VB-G RAM G) என மத்திய அரசு கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது.

100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கம்

இந்த திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கப்படுவதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ''#MGNREGA-வில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்! நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனை

வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதனை அண்ணா பெயரில் கட்சி வைத்துள்ள அதிமுக எதிர்க்காதது ஏன்? மூன்று வேளாண் சட்டம், சிஏஏ போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா எடப்பாடி பழனிசாமி?'' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

காங்கிரஸ் காந்தி பெயரையே வைக்கவில்லை

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை, 100 நாள் வேலை திட்டத்தில் முதலில் காங்கிரஸ் காந்தி பெயரையே வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அண்ணாமலை, ''2005ம் ஆண்டுல் 100 நாள் வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டபோது காங்கிரஸ் மகாத்மா காந்தி பெயர் வைக்கவில்லை. 2009 தேர்தல் வந்தபோது தான் காந்தி பெயரை வைத்தார்கள். நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.

100 நாள் வேலையை 125 நாட்களாக உயர்த்தியுள்ளோம்

காந்தி மீது பிரதமர் மோடி பெரிதும் மரியாதை வைத்துள்ளார். பாஜக அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் காந்தியின் பெயரை மோடி வைத்தார். 2005ல் ஏழைகளின் சதவீதம் 28. ஆனால் இப்போது 1%க்கும் குறைவான ஏழைகளே உள்ளனர். அப்போது நிலைமை வேறு; இப்போது நிலைமை வேறு. ஒரே திட்டத்தை 50 ஆண்டு காலம் ஒரே மாதிரி நடத்த முடியாது. இப்போது 100 நாள் வேலையை 125 நாட்களாக உயர்த்தியுள்ளோம். இது குறித்து ஏன் காங்கிரஸ் பேசவில்லை?

தனி உலகில் வாழும் ஸ்டாலின்

நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களின் பெயரையும் சமஸ்கிருத மொழியில் வைத்துக் கொண்டு, ஹிந்தி எதிர்ப்பு என்று இன்னும் நாடகமாடிக் கொண்டிருப்பது நகைமுரண். 100 நாள் வேலைத் திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்துவோம் என்று அளித்த வாக்குறுதி நினைவிருக்கிறதா முதல்வர் ஸ்டாலின் அவர்களே. முன்பு போல 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் செய்ய முடியாது என்ற கவலையா?'' என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Chennai Metro Train: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!
அன்புமணி மீதான ஊழல் வழக்குகள்.. சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்துங்க.. ராமதாஸ் கோரிக்கை