ஆளும் அதிமுக அரசைக் கண்டித்து ஈரோட்டில் திமுக பொதுக்கூட்டம்....

Asianet News Tamil  
Published : Dec 01, 2017, 09:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
ஆளும் அதிமுக அரசைக் கண்டித்து ஈரோட்டில் திமுக பொதுக்கூட்டம்....

சுருக்கம்

DMK general meeting in Erode denounced the ruling AIADMK

ஈரோடு

மொடக்குறிச்சியில் தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசைக் கண்டித்து தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தின் ஆளும் அதிமுக அரசைக் கண்டித்து ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் திமுக சார்பில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மொடக்குறிச்சி ஒன்றிய தி.மு.க செயலாளர் சு.குணசேகரன் தலைமை வகித்தார். திமுகவின் பேரூர் செயலாளர் பி.வி.சரவணன் வரவேற்று பேசினார்.

கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி என்.சிவா, ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசின் செயல்பாடுகளை குறித்தும் , பாஜகவுடன் கைகோர்த்து  தமிழகத்திற்கு தீங்கிழைப்பதாகவும், உள்ளாட்சி தேர்தலுக்கு முட்டுக்கட்டாய் இருப்பதாகவும் விமர்சித்து பேசினர்.

இந்தக் கூட்டத்தில் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் எம்.கந்தசாமி, மாநில ஆதி திராவிடர் நலக்குழு செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ்,

மாநில கொள்கைபரப்பு இணை செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம், மாவட்ட கழக நிர்வாகிகள் கே.குமார்முருகேஸ், என்.டி.பத்மநாபன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் துணைச் செயலாளர் கே.குப்புசாமி நன்றித் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!