
படப்பை பகுதியில் திமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 8 பேரை மணிமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
படப்பை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் (34). படப்பை ஊராட்சிமன்ற உறுப்பினராகவும், திமுக இளைஞர் அணிச் செயலாளராகவும் இருந்து வந்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முனைப்பில் இருந்தார். இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி டேவிட் நகர் பகுதியில் உள்ள தேவாலயத்திற்குச் சென்றபோது தனசேகரனை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர்.
இதுகுறித்து மணிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், படப்பையை அடுத்த கரசங்கால் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (31), தினேஷ் (26), சுரேஷ் (24), விஸ்வநாதன் (24), மணிகண்டன் (25), அஜித்குமார் (22), பிரகாஷ் (24) மணிமங்கலம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (24) ஆகியோரை இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்தனர்.