ஓபிஎஸ், வைத்திலிங்கத்துக்கு சீட்.. 60+ புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. திமுக வேட்பாளர்கள் பட்டியல்.. முழு லிஸ்ட்!

Published : Mar 28, 2026, 04:25 PM IST
mk stalin

சுருக்கம்

திமுக போட்டியிடும் 164 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இது தொடர்பான முழு பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக மட்டும் 164 தொகுதிகளில் களம் காண்கிறது. இந்த நிலையில், திமுக போட்டியிடும் 164 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். மு.க.ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன?

அண்மையில் திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோல் அண்மையில் திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் துரைமுருகன் - காட்பாடி, அனிதா ராதாகிருஷ்ணன்- திருச்செந்தூர், பி.மூர்த்தி - மதுரை கிழக்கு, கே.என்.நேரு - திருச்சி மேற்கு, அன்பில் மகேஷ் - திருவெறும்பூர், கீதா ஜூவன் - தூத்துக்குடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - அருப்புக்கோட்டை, தங்கம் தென்னரசு - திருச்சுழி, அப்பாவு - ராதாபுரம், எ.வ.வேலு - திருவண்ணாமலை, மெய்யநாதன் - ஆலங்குடி, சேகர்பாபு - துறைமுகம், செந்தில் பாலாஜி - கோவை தெற்கு, ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி, ஐ.பெரிசாமி - ஆத்தூர், மா.சுப்பிரமணியன்- சைதாப்பேட்டை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - மதுரை மத்தி, டி.ஆர்.பி.ராஜா - மன்னார்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

 

 

பட்டம் பெற்றவர்கள் 125 பேர்

திமுக கூட்டணியில் போட்டியிடுபவர்களில் பெண்கள் 18 பேர், முனைவர் 7 பேர், சட்டம் படித்தவர்கள் 29 பேர், மருத்துவர்கள் 15, பட்டம் பெற்றவர்கள் 125 பேர் என முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பெருமையுடன் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் பட்டியலில் 60க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ராஜராஜசோழன் சிலையை திருடியது இவர்தான்.! நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?!
மதுரை வடக்கு.. தளபதிக்குச் செக் வைக்கும் டாக்டர் சரவணனின் வியூகம்..! தடுமாறும் திமுக..!