தீபாவளி முதல் விபத்து - சிந்தாதிரிபேட்டையில் மரக்கடை எரிந்தது

Asianet News Tamil  
Published : Oct 30, 2016, 02:19 AM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
தீபாவளி முதல் விபத்து - சிந்தாதிரிபேட்டையில் மரக்கடை எரிந்தது

சுருக்கம்

தீபாவளி பணிடிகையையொட்டி விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறை மற்றும் பிற துறைகள் செயல்பட்டாலும் எப்படியும் விபத்துகள் நடக்கத்தான் செய்கிறது. இதில் முதல் விபத்தாக சிந்தாதிரிப்பேட்டையில் மரக்கடை ஒன்று எரிந்து நாசமானது.

நேற்றிரவு சிந்தாதிரிபேட்டை டாம்ஸ் சாலையில் உள்ள மரக்கடையில் திடீர் தீ.விபத்து ஏற்பட்டது . தீ மளமளவென பரவியது. உள்ளே இருந்தது மரக்கட்டைகள் என்பதால் தீ வேகமாக வேகமாக பரவியது.

இது பற்றி தீயணைப்புத்துறையினருக்கு பொதுமக்கள் புகார் அளித்ததன் பேரில் திருவல்லிக்கேனி ,எழும்பூர்,மற்றும் கீழ்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து  தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயனைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.                     

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்.. வைரலாகும் செல்லூர் ராஜு பேட்டி.. கடுப்பான அதிமுக தொண்டர்கள்!
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி