மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டிகள்…

 
Published : Nov 15, 2016, 02:19 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டிகள்…

சுருக்கம்

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டிகள் தர்மபுரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

10, 13, 15, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவ – மாணவிகள் மற்றும் மூத்தோர் ஆண்கள், பெண்கள் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டிகளை நிர்வாகி மணிகண்டன் தொடங்கி வைத்தார். பயிற்றுனர் சீனிவாசன் வரவேற்றார்.

இந்த போட்டிகளில் 750–க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடினார்கள்.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கணேசன், வெங்கடேஷ், ஞானப்பழம், சக்தி, வெங்கடகிருஷ்ணன், செழியன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.

வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தப் போட்டியில் வெற்றி அடைய, இரவு பகலாக எடுத்த கடும் முயற்சிக்கு கிடைத்த பலன் என்று மாணவர்கள்  கருத்துத் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
புதிய பொறுப்பாளர்கள் நியமித்து அதிரடி.. தமிழ்நாடு அரசியலில் பாஜக அதிரடி மூவ்!