சொகுசு காரில் சென்றபோது... விபத்தில் சிக்கிய இயக்குனர் கௌதம் மேனன்... 

 
Published : Dec 07, 2017, 01:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
சொகுசு காரில் சென்றபோது... விபத்தில் சிக்கிய இயக்குனர் கௌதம் மேனன்... 

சுருக்கம்

director gowdam menon car met accident near ecr

சென்னை : 
இயக்குனர் கௌதம் மேனன் சென்ற சொகுசு கார் இன்று விபத்தில் சிக்கியதில் அவரது கார் சேதமடைந்தது. கௌதம் மேனன் சிறு காயங்களுடன் தப்பினார். 

மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் கௌதம் மேனன். வெற்றிப் படங்கள் பல இயக்கியவர். இவர், தற்போது விக்ரமின் துருவ நட்சத்திரம் மற்றும் தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் கௌதம் மேனன், மாமல்லபுரத்தில் இருந்து தன்னுடைய சொகுசு காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள செம்மஞ்சேரி அருகே, டிப்பர் லாரி மீது அவர் வந்த சொகுசு கார் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், சிறு காயங்களுடன் கௌதம் மேனன் உயிர் தப்பினார். அவர் வந்த சொகுசு கார் சேதமடைந்தது. இந்தத் தகவல் வெளியானதும், அவரது நண்பர்கள் பலர் அவருக்கு போன் செய்து, நலம் விசாரித்து வருகின்றனராம். 

PREV
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த பெலிக்ஸ் ஜெரால்டு! சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய விஜய்! தவெகவினர் குஷி!
எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது