
தினகரன் கேட்டாரே ஒரு கேள்வி ..! அரசியல் வாதினா கோமனத்தோட அலையனுமா..? சொத்தே இருக்க கூடாதா ?
சசிகலா மற்றும் தினகரனுக்கு சொந்தமான பல இடங்களில் மூன்றாவது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
1996 ஆம் ஆண்டு கூட எங்கள் வீட்டில் சோதனை நடைபெற்றது. இதுபோன்ற சோதனை வழக்கமாக நடைபெறுவது தான், எங்கள் கட்சி சிறிய கட்சி தான் பிறகு எதற்கு எங்களை தொந்தரவு செய்கிறார்கள் ?
இந்த சோதனையிலும் தினகரன் பேசும் போது, எதுவுமே நடக்காதது போலவே இயல்பாக பேசுகிறார். எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் ...இது புதிதல்ல என பல முறை கூறினார்
ஐடி அதிகாரிகள் தவறான தகவலை தெரிவிக்கவில்லை...
தங்களை குற்றம் சாட்டி வருபவர்கள் காந்தியின் வாரிசுகள் அல்ல.....
பணம் தங்கம் பறிமுதல் செய்திருந்தால் அதற்கான கணக்கு சமர்பிக்கப்படும்
குறிப்பாக கட்சியை காப்பாற்ற நாங்கள் போராடி வருகிறோம் .....அதனை தடுக்க ஏதோ உள்நோக்கத்துடன் தான் இது நடக்கிறது என குறிப்பிட்டார்.