தினகரன் அளித்த பதவிக்கு சம்மதம் தெரிவித்தார் கதிர்காமு...!!!

Asianet News Tamil  
Published : Aug 06, 2017, 06:45 PM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
தினகரன் அளித்த பதவிக்கு சம்மதம் தெரிவித்தார் கதிர்காமு...!!!

சுருக்கம்

dinakaran give the post accepted to mla kathikamu...

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் சிறைக்கு சென்று திரும்பிய டிடிவி தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் இணைய  60 நாள்கள் கெடு கொடுத்தார். 

அந்த 60 நாட்கள் நிறைவுற்ற நிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு தினகரன் வருவார் என தகவல் வெளியானது. 

இந்நிலையில், நேற்று முன் தினம் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். 

இதில், அம்மா அணியின், கழக மருத்துவரணி இணைச்செயலாளராக தினகரனால் கதிர்காமு அறிவிக்கப்பட்டார் 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமு, கழகம் பல அணிகளாக பிரிந்துகிடப்பது மனதிற்கு வேதனையாக இருக்கிறது எனவும், இன்னும் நூறு ஆண்டுகள் அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்தார். 

மேலும் தற்போது தினகரன் கொடுத்துள்ள பதவி எனக்கு வேண்டாம் எனவும், அம்மாவின் மக்கள் திட்டங்களை சட்டமன்ற உறுப்பினராக இருந்து செயல்படுத்தவே விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில், கழக மருத்துவரணி இணைச்செயலாளராக  பொறுப்பேற்க கதிர்காமு சம்மதம் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

அதிமுக.. திமுக புரிஞ்சுக்கோங்க மரியாதை மற்றும் சீட்டுகளை யார் தருகிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி
3வது வரிசையில் தள்ளப்பட்ட ராகுல் காந்தி... கொதித்தெழுந்த காங்கிரஸ்.. இதுதான் ஜனநாயகமா?