
தமிழகத்தில் நடைபெற்று வரும் அசாதாரண சூழ்நிலையில், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்க டி.டிவி தினகரன் திட்டமிட்டிருந்தார். அதன்படி சிறைதுறையிடம் மாலை 5 மணிக்குள் அனுமதி பெறாததால் தினகரன் சசிகலாவை இன்று சந்திக்கவில்லை.
இரட்டை இலைக்காக லஞ்சம் அளித்த புகாரின் கீழ் டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி அதிகாரிகளுன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
உரிய ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் டிடிவி தினகரன் எப்போது வேண்டுமேனாலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தன் பக்கம் உள்ள அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் தக்க வைக்க பல்வேறு யூகங்களை வகுத்து வரும் தினகரன் இது குறித்து சசிகலாவுடன் ஆலோசிக்க இன்று பெங்களூரு செல்வதாக அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று தினகரன் பெங்களூர் புறப்பட்டு சென்றார். இந்நிலையில், கைதியை பார்பதற்கு மாலை 5 மணிக்குள் சிறைத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்பது வரைமுறை.
ஆனால் சிறைதுறையிடம் மாலை 5 மணிக்குள் அனுமதி பெறாததால் தினகரன் சசிகலாவை இன்று சந்திக்கவில்லை.