
பன்னீர்செல்வமும் எடப்படியாரும் நேற்று காலை அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி நியமனம் ரத்து செய்தது, தினகரனின் ஆதரவாளர்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களுக்கு தினகரன் தனது ஆதங்கத்தை டிவிட்டரில் கொட்டித்தீர்த்துள்ளார்.
நேற்று துரோகிகள் ஒன்று கூடி பொதுக்குழு என்ற பெயரில் கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பாக, எதிராக ஒரு கூட்டத்தை கூட்டிதியாகத் தலைவி சின்னம்மாவை பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு கொதித்தெழுந்த கழகத்தின் உண்மை தொண்டர்கள் தமிழகம் முழுவதும் துரோகிகள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் உருவ பொம்மைகளை கொளுத்தி வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துகாவல்துறையை ஏவி உண்மை தொண்டர்களை கைது செய்து வருகின்றனர்.
ஜனநாயக முறையில் போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் பழனிச்சாமி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.அதிமுகவின் ஆணிவேரான தொண்டர்களை அசைத்து பார்க்க முயற்சித்தால் தமிழகம் நிச்சயம் உங்களை மன்னிக்காது. கைதானவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
பொதுக்குழு கூடி சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம் ரத்து செய்த்த்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் தன்னுடைய ஆதங்கத்தை ட்விட்டர் கொட்டித்தீர்த்துவிட்டார் தினகரன்.