டிஜிபி பதவியில் இருந்து விலகுகிறாரா சைலேந்திர பாபு? அடுத்தடுத்து சர்ச்சைகளால் பரபரப்பு

Published : Oct 08, 2022, 06:38 PM IST
டிஜிபி பதவியில் இருந்து விலகுகிறாரா சைலேந்திர பாபு? அடுத்தடுத்து சர்ச்சைகளால் பரபரப்பு

சுருக்கம்

டிஜிபி சைலேந்திர பாபு ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் நடந்த ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டுள்ளனர். இந்த 133 பேரில் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர், முக்கிய ரவுடிகள் 13 பேரும் சிக்கியுள்ளனர். இந்த 13 ரவுடிகள் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர்கள் ஆவர்.

இதையும் படிங்க..ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் சவுதி பணக்காரர்கள் ஏன் இல்லை தெரியுமா? வெளியான ஆச்சர்ய தகவல் !

இதுகுறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் ரவுடி வேட்டை தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதில் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டனர். கொலை, கொள்ளை வழக்குகளில் நிலுவையில் இருந்த 15 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ஏபிளஸ் 13 ரவுடிகளும் சிக்கினர். இவர்கள் மீது பல கொலை, கொள்ளை, நில அபகரிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பிடிபட்ட மற்ற 105 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. "மின்னல் ரவுடி வேட்டை" தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்படியொரு வேட்டை நடத்திய பிறகு டிஜிபி குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க..திமுக பிளானை காப்பி அடித்த அண்ணாமலை.. அதே இடம், அதே நேரம்.. நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

இந்நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அப்படி இருக்கும் போது,  டிஜிபி சைலேந்திர பாபுவின் முகநூல் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதில், ‘இங்கு யாரும் நிரந்தரமில்லை; இதை புரிந்து கொண்டால் நாம் சரியாகி விடுவோம். Nobody is permanent here; if you understand this , you are fine’ என்று பதிவிடப்பட்டுள்ளதால், இதற்கும் அதற்கும் சம்பந்தம் இருக்குமோ என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க..பொன்னியின் செல்வன் குந்தவையாக மாறிய கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்.. அதிர்ச்சியில் தெலங்கானா முதல்வர் KCR !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live Today 28 December 2025: டிசம்பர் 31ல் டெலிவரி ஸ்டாப்.. உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி! ஸ்விக்கி, சோமாட்டோ ஊழியர்கள் போராட்டம்
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி