சூப்பர் அறிவிப்பு!!அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..புதிய அரசாணை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை..

By Thanalakshmi VFirst Published May 19, 2022, 10:22 AM IST
Highlights

தமிழகத்தில்‌ 3,000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்‌ துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்கள்‌ சேர்க்கை அதிகரித்துள்ளதால்‌, ஆசிரியர்களுக்கு மேலும்‌ ஓராண்டு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் படிக்க: சிதம்பர கோவிலில் இனி இதற்கு அனுமதி.. தீட்சிதர்கள் போட்ட முட்டுக்கட்டை.. ரத்து செய்து அரசு போட்ட திடீர் உத்தரவு

அரசு பள்ளிகளில்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில்‌, விருப்ப இடமாறுதல்‌, பணி நிரவலுக்கான இணைய கவுன்சிலிங்‌, மூன்று மாதங்களுக்கு முன்‌ நடத்தப்பட்டது.அதன்படி, 3,000 ஆசிரியர்கள்‌ கூடுதல்‌ இடங்களில்‌ பதவியேற்றனர்‌. இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம்‌ நிறுத்தப்பட்டது. அரசாணை இல்லாமல்‌, புதிய இடங்களுக்கு சம்பளம்‌ வழங்க முடியாது என்று நிதித்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில்‌, பள்ளிக்கல்வித்‌ துறை சார்பில்‌ பணி நீட்டிப்பிற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும்‌, ஆசிரியர்களுக்கு ஊதியம்‌ மற்றும்‌ இதர படிகளை வழங்கிடவும்‌ பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க: அடிச்சு தூக்கும் விலை.. புதிய உச்சத்தை நோக்கி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

click me!