
மதுரை
மதுரையில் டெங்கு ஒழிப்பு கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மக்களுக்கு டெங்கு தாக்காமல் இருக்க நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், எழுமலையில் வடமேற்கு ரோட்டரிச் சங்கம், பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பேரூராட்சி ஆகியவற்றின் சார்பில் டெங்கு ஒழிப்பு கருத்தரங்கம் நடைப்பெற்றது.
இந்த கருத்தரங்கத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலமும் நடைப்பெற்றது. அந்த ஊர்வலம் எழுமலை பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பல்லுக்கடை மைதானத்தை அடைந்தது. இதில் மாணவர்கள் டெங்கு குறித்தான விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியை வடமேற்கு ரோட்டரிச் சங்கத்தைச் சேர்ந்த மனோகர், யத்தினேஷ் பட் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பள்ளி தாளாளர் பொன்.கருணாநிதி, ரோட்டரி சங்க நிர்வாகி பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் எழுமலை பேருந்து நிலையத்தில் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. இந்த ஏற்பாடுகளை தாசில்தார் சிவக்குமார் செய்திருந்தார்.
இதில், பள்ளி நிர்வாகி வரதராஜன், பள்ளி முதல்வர் ஆறுமுகசுந்தரி, ஆசிரியர்கள், பேரூராட்சி அலுவலர்கள் பரசிவம், நாகராஜ், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.