
தமிழகத்தில் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் மிரட்டி வருவதால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர். இன்று காலை முதல் தற்போது வரை 5 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அடுத்த கொரலநத்தம் கிராமத்தில் 5 வயது சிறுமி சஹானா டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட கடந்த 5 நாட்களாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் , மேல் சிகிச்சைக்காக தருமபுரி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்
வேலூர் மாவட்டம் நாற்றம்பள்ளியில் டெங்கு காய்ச்சலுக்கு 6 மாத குழந்தை பலியானது. கார்த்திக்-பாக்கியலட்சுமியின் 6 மாத ஆண் குழந்தை பிரதீப், டெங்கு பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தது.
திருச்சி மேட்டுப்பாளையம் அருகே டெங்கு காய்ச்சலால் திருநாவுக்கரசு என்பவர் உயிரிழந்தார். திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், திருநாவுக்கரசர் சிகிச்சை பலனின்றி உயிரிழநதார்.
தொடர்ந்து டெங்கு உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் பொது மக்களிடையே பீதி ஏற்ப்டடுள்ளது.