டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி த.மா.கா ஆர்ப்பாட்டம்...

First Published Mar 21, 2018, 9:26 AM IST
Highlights
Demonstration of tmk demanding to declare Delta District as a protected agricultural zone ...


திருவாரூர்

டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி திருவாரூரில் த.மா.கா. ஆர்ப்பாட்டம் நடத்தியது. 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பெரியார் சிலை அருகில் தமிழ் மாநில காங்கிரசு மாவட்ட இளைஞர் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

"காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். 

பெட்ரோல் - டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். 

டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு த.மா.கா. மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன் தலைமை தாங்கினார். இளைஞர் அணி தலைவர் சங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிங்குபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கரிகாலன், மன்னார்குடி வட்டார தலைவர் முனியப்பன், முன்னாள் நகரசபை தலைவர் ராஜேந்திரன், நீடாமங்கலம் தலைவர் சந்திரசேகரன், மாவட்ட பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வட்டார இளைஞர் அணி தலைவர் சஞ்ஜெய் நன்றித் தெரிவித்தார். 

click me!