வேளாண் சட்டங்கள் வாபஸ்… மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தும் டெல்டா விவசாயிகள்!! | CMStalin

By Narendran SFirst Published Nov 19, 2021, 5:35 PM IST
Highlights

#CMStalin | மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்த நிலையில் 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருவாருரில் பாராட்டு விழா நடத்தப்படும் என டெல்டா விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்த நிலையில் 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருவாருரில் பாராட்டு விழா நடத்தப்படும் என டெல்டா விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது. விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் திட்டம் என்று பிரதமர் மோடி ஓராண்டாக கூறிவரும் நிலையில், இந்த சட்டங்களுக்கு எதிராக ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் நூற்றுக் கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சரின் மகன் கார் மோதியதில் விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதுமட்டுமின்றி டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்திய போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் செங்கோட்டை முற்றுகை, டிராக்டர் பேரணி, ரயில் மறியல், பல மாதங்களாக சாலைகள் மூடல் என விவசாயிகள் போராட்டம் குறித்த தகவல் நாடு முழுவதும் பரவியது. இந்த நிலையில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பை விவசாயிகள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

இந்த நிலையில் தமிழகத்தில் விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மூன்று மாதங்களில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இதனால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்டா விவசாயிகள் சார்பில் திருவாரூரில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார். மூன்று  வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து திருவாரூரில் திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும் தமிழக முதல்வரான பின்னர் தமிழக சட்டமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார் என்றும் குறிப்பிட்டார். மேலும் மூன்று புதிய வேளாண்  சட்டங்களும் ரத்து செய்யப்பட்டதை அடுத்து திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் விவசாயிகள் தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முதல்வருக்கு மிகப்பெரிய பாராட்டு விழா வைக்கவேண்டும் என்று கூறிவருவதாக தெரிவித்த அவர், திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் இன்னும் ஒரு மாதத்திற்கு பின்னர் முதல்வரின் அனுமதி பெற்று அந்த பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். 

click me!