தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து, இழப்பீடு வழங்கக் கோரி நாளை போராட்டம்….

First Published Jan 2, 2017, 10:25 AM IST
Highlights


தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து, நெல் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், கரும்புக்கு ரூ.50 ஆயிரமும் இதர பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரமும் இழப்பீடு வழங்கக் கோரி பெரம்பலூர் நாளை முதல் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது என கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் கருப்புடையார் தலைமை தாங்கினார்.

ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்ற இந்த கூட்டத்தில், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.கே. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். 

மாவட்ட செயலர் அன்பழகன், பங்குதாரர்கள் சங்கம் மற்றும் கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன், துணை தலைவர்கள் துரைசாமி, ஜானகிராமன், ஞானசேகரன், மாவட்ட பொருளாளர் காமராஜ் ஆகியோர் விவசாயிகளின் கோரிக்கைகளை விளக்கி பேசினர். 

இந்தக் கூட்டத்தில், “தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து, நெல் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், கரும்புக்கு ரூ.50 ஆயிரமும் இதர பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும்”.

“விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகை ரூ.20.49 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்”.

“கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் விலை அறிவிக்க வேண்டும்”.

“பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 18 மெகா வாட் மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களை துரிதப்படுத்தி, நிகழாண்டு கரும்பு அரவை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

“பாடாலூரில் பால் குளிரூட்டும் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும்”.

“பால் பவுடர் தொழிற்சாலை அமைக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூர் சர்க்கரை ஆலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

click me!