
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நாராயண புரத்தில் பட்டாசு ஆலை செயல்படுகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.
இன்று காலை அனைத்து தொழிலாளர்களும் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சற்று நேரத்துக்கு முன், திடீரென பயங்கர சத்தத்துடன் அலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சடலங்களை பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் சிலர், உள்ளே சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.