
வங்கிகளை தவிர்த்து அனைத்து இடங்களிலும் ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்று இறுதிநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை கே.கே.நகரில் உள்ள இந்தியன் வங்கி முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாதது என பிரதமர் மோடி அறிவித்ததை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டத்தால் வங்கியில், பண பரிவர்த்தணை செய்ய வந்த மக்கள் கடும் சிரம்ம் அடைந்தனர்.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பெட்ரோல் பங்க், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சிக்கல் நீடிக்க வாய்ப்புள்ளது. செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்வதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது.
அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இனி வங்கி கணக்குகளில் மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.
வங்கி மற்றும் தபால் நிலையங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்று கடைசி நாள் என்பதால் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி மின்சாரம் மற்றும் சொத்துவரி செலுத்தவும் இன்று கடைசி நாளாகும். பெட்ரோல் பங்க்குகளிலும் இன்று கடைசி நாள் என்பதால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் சிக்கல் அதிகரிக்கும் என தெரிகிறது.