வீட்டில் யாரும் இல்லையா.. வீடியா கால் வா..அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்.. கொதித்தெழுத்த மாணவிகள்..

By Thanalakshmi VFirst Published Dec 24, 2021, 8:10 PM IST
Highlights

கோவையில் மாணவிகளிடம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியும், ஆடை அணியாமல் ஆன்லைனில் பாடம் நடத்தியும் பாலியல் தொந்தரவு கொடுத்த  ஆசிரியரை கைது செய்யக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பணிபுரியும் கணிணி அறிவியல் ஆசிரியர் விஜய் ஆனந்த் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகளை எடுக்கும் இவர், மாணவிகள் சிலருக்கு ஆசிரியர் விஜய் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

குற்றச்சாட்டப்பட்ட ஆசிரியர் விஜய் ஆனந்த், ஆன்லைன் வகுப்பின்போது, மாணவிகளுக்கு தனியாக வீடியோ கால் செய்து தொல்லை கொடுப்பதாகவும், கம்யூட்டர் கிளாஸ்க்கு போகும் போது தேவை இல்லாமல் தொட்டுத் தொட்டு பேசுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆன்லைன் வகுப்பு என்று கூறி மாணவிகளுக்கு தனியாக வீடியோ கால் செய்து, டி ஷர்ட் அணியுமாறும், வீட்டில் யாரும் இல்லையா எனக் கேட்டு ஆபாசமாக நடந்துகொள்ளுவதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஆன்லைன் வகுப்பின் போது வீடியோ காலில் டிரெஸ் இல்லாமல் வருகிறார் என்று கூறும் மாணவிகள் பாடங்களை தாண்டி ஸ்நாக்ஸ் வாங்கி தருகிறேன் என்றெல்லாம் பேசுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து வெளியே சொன்னால் செய்முறை தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. அவரும் ஒரு வாரத்திற்கு முன்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இப்பிரச்னை தொடர்பாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஆனால், இதுவரை குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறிய மாணவ, மாணவிகள் ஆசிரியரை கைதுசெய்ய வலியுறுத்தி பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரும், பள்ளி நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர். 

இந்நிலையில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதை தொடர்ந்து ஆசிரியர் விஜய் ஆனந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

click me!